நடிகை லாஸ்லியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது நடிகை லாஸ்லியா ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்து வரும் கூகுள் குட்டப்பன் படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை லாஸ்லியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த இந்த அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.