Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர்… தீயாய் பரவும் புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடிகை சுசித்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சதீஷ், நேகா மேனன், விஷால், ரித்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இதில் பாக்கியலட்சுமியின் கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சதீஷ் தமிழகத்தின் முன்னால் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆரின் பயோபிக்கில் நடித்துள்ள புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |