Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா இல்ல… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மேல் மாடியில் இவருடைய தங்கையான மல்லிகேஸ்வரி என்பவர் தனது கணவர் டில்லி மற்றும் மகள் நாகேஸ்வரி போன்றோருடன் வசித்து வந்துள்ளார். இதில் நாகேஸ்வரிக்கு திருமணமாகி கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகளின் வாழ்க்கையை நினைத்து மல்லிகேஸ்வரியும், டில்லியும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதற்கிடையில் குடும்பத்தில் உள்ள 3 பேருக்கும் திடீரென உடல்நலம் சரியில்லாமல் ஆனதால் மருந்து கடைக்கு சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஆனாலும் 3 பேருக்கும் காய்ச்சல் குறையவில்லை.

இந்நிலையில் மல்லிகேஸ்வரி நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது அண்ணன் வெங்கட்ராமன் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் கதவு உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த வெங்கட்ராமன் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமுல்லைவாயல் காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மல்லிகேஸ்வரி, டில்லி மற்றும் அவர்களது மகள் நாகேஸ்வரி என மூன்று பேரும் வீட்டில் தூக்கிட்டு சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து 3 பேரின் உடல்களையும் காவல் துறையினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொரோனா தொற்று அச்சம் காரணமாக 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |