விருச்சிகம் ராசி அன்பர்களே.! நிதானமாக செயல்பட வேண்டும்.
இன்று காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவிகள் செய்வார்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அன்னிய தேச பயணத்திற்கு தீட்டிய திட்டம் நிறைவேறும். மனதிற்குள் சந்தோஷம் குடிகொள்ளும். நிதானமாக இருப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கேலி கிண்டல் பேச வேண்டாம். நீங்கள் நல்ல விதமாக சொல்லும் கருத்துகளை கூட மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரனை வேண்டும். வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை. இன்று வாகனத்தில் ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்ல பாருங்கள்.
இன்று காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் கவனமாக எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொண்டு அதற்கேற்றாற் போல் நடந்து கொண்டால் காதல் கைகூடி விடும். பிரச்சனையாக உள்ள காதல் கூட ஓரளவு சரியாகிவிடும். மாணவர்களுக்கு இன்றைய நாளில் கல்வி மீது அக்கறை ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் மஞ்சள்