Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின்… சுகாதாரத் துறைக்கு அதிரடி உத்தரவு…!!!

கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி இடம்பெறாததை அடுத்து மத்திய அரசிடம் சுகாதாரத்துறை வலியுறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

cowin.in  இணையதள பக்கத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் மொழியை சேர்க்க வேண்டி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு cowin.in இல் பதிவு செய்ய வேண்டும். அதற்காக மத்திய அரசு  cowin.in வகையிலான இணைய தளத்தை உருவாக்கியது.

இதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே ஆரம்ப காலத்தில் இருந்தது தற்போது புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.  மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி, கன்னடம், ஒரியா போன்ற மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்மொழி இல்லாத காரணத்தினால் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டிருந்த போது தமிழ் வழியில் அந்த இணையதளத்தை பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உடனே இதனை சரி செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தும் படி சுகாதாரத் துறைக்கு முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |