Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு துப்பாக்கி சூடு… வசமாக சிக்கிய ரவுடி… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

காவல் அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட பிரபல ரவுடியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்திலுள்ள தேனாம்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற பிரபல ரவுடி வசித்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு குற்ற வழக்கில் தனிப்படை காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பித்து செல்லும் நோக்கத்தில் மணிகண்டன் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனையடுத்து துப்பாக்கியிலிருந்து வந்த குண்டானது நின்று கொண்டிருந்த காவல் அதிகாரி பாலகிருஷ்ணன் என்பவரின் கையில் பயந்து விட்டது. அதன் பிறகு அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்த மணிகண்டன் போரூர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தால் அவரது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் இருந்த சொகுசு கார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் மணிகண்டன் மீது கொலை முயற்சி மற்றும் ஆயுதங்கள் வைத்திருத்தல் போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்டாலின் என்பவர் நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளார். அதன்பின் நீதிபதி மணிகண்டனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |