Categories
தேசிய செய்திகள்

70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த… விட்கோ நிறுவனம் மூடல்…!!!

70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விட்கோ நிறுவனம் தனது வணிகத்தை மூடி விடுவதாக தன் இணையத்தில் அறிவித்துள்ளது.

1951ஆம் ஆண்டு சென்னையில் ஜார்ஜ் டவுன் என்ற பகுதியில் 500 சதுர அடியில் தொடங்கப்பட்டது விட்கோ என்னும் நிறுவனம். இது பல ஆண்டுகளாக வெற்றிகரமாக தனது பயணத்தை நடத்தி வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் சூட்கேஸ்கள், ஸ்கூல் பேக்குகள், லக்கேஜ் ட்ரால்லி என பல பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது. தற்போது இந்த பயணம் 2020 ஜூன் 3 முடிவடைந்துள்ளது. கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. பல வர்த்தகங்கள் மூடப்பட்டுள்ளது.  அந்த வகையில் இந்த வர்த்தக நிறுவனமும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து நிறுவனம் தங்களது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “நாங்கள் எங்கள் பிசினஸை முற்றிலும் மூடுகிறோம் என்ற துயரமான தகவலை தெரிவித்துக் கொள்கிறோம். ஊரடங்கு காரணமாக வெளிநாட்டு பயணங்களின் தாக்கத்தால் இந்த முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். 70 ஆண்டுகளாக எங்களின் பிராண்டுக்கு முழு ஆதரவு கொடுத்த வாடிக்கையாளர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு விட்கோ குடும்பம்” என்று தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |