Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! ஆசைகள் நிறைவேறும்….! தொல்லைகள் இருக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! ஆசைகள் நிறைவேறும் நாள்.

இன்று ஆசைகள் நிறைவேறும் நாள். உற்றார் உறவினர்களின் வருகை உண்டாகும். உறவினர்களால் உங்களுக்கு சின்னசின்ன தொல்லைகளும் இருக்கும்.  உடல்நல ஆரோக்கியம் சீர் கெடும் வாய்ப்பு இருக்கும். மன அமைதியை நீங்கள் கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். மாமன் மைத்துனன் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடின உழைப்பிற்குப் பின் முன்னேற்றமடைய கூடும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேர்ந்துவிடும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டுக்களையும் பெறமுடியும்.

திருமணமாகாத பெண்களுக்கு கண்டிப்பாக நல்ல வரன்கள் வரக்கூடும். கணவன் மனைவி இருவரும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். குடும்ப ஒற்றுமைக்காக நீங்கள் பாடுபட வேண்டும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. காதல் பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தி விடும். இன்று மாணவர்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்யுங்கள் கண்டிப்பாக உங்களது வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் நீலம்

Categories

Tech |