Categories
உலக செய்திகள்

சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர்… லட்சக்கணக்கான மக்கள் தவிப்பு… ஐ.நா. மனிதநேய அமைப்பு பரபரப்பு தகவல்..!!

ஐ.நா. மனித நேய அமைப்பு சமீபத்தில் சோமாலியா நாடு முழுவதும் பெய்த கனமழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் சோமாலியா நாடு முழுவதும் பெய்த கனமழையால் 14 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பின் மனிதநேய விவரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ஒரு லட்சத்து ஆயிரத்து 300 பேர் வேறு இடத்திற்கு தஞ்சமடைந்துள்ளதாகவும், பெரும்பாலான மக்கள் சோமாலியாவின் ஜாப் மண்டலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 66 ஆயிரம் பேர் ஜோஹர் மாவட்டத்தில் உள்ள 27 கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் 40 ஆயிரம் ஹெக்டர் விளை நிலங்கள் வெள்ளத்தில் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும், 11 பள்ளிகளில் கல்வி தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 22 ஆயிரம் பேர் பெலெட்வெய்ன் நகரில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பயத்தில் இடம்பெயர்ந்துள்ளதாகவும், விவசாய நிலங்கள் 1,235 ஹெக்டேர் அளவில் அழிந்து நாசமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |