நாமக்கல்லில் இன்று (ஜூன்-5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகளாக விற்பனையாகிறது.
Categories