சிபிஐ அமைப்பின் 33ஆவது இயக்குனராக கடந்த வாரம் சுபாஷ் குமார் ஜெய்ஸ்வால் பதவியேற்றார். அவர் நிர்வாக ரீதியாக பல மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளார். அவ்வகையில் சிபிஎம் ஊழியர்கள் அணியும் உடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், சிபிஐ அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் முறையான சட்டை, பேண்ட் மற்றும் ஷூக்களை மட்டுமே அணிய வேண்டும். தாடி வைத்து அலுவலகத்திற்கு வரக்கூடாது. முழுவதும் சேவ் செய்து வர வேண்டும்.
பெண் ஊழியர்கள் அனைவரும் புடவை, சூட் முறையான சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கொள்ளலாம். மேலும் ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட், ஸ்போர்ட்ஸ் ஷுக்கள் மற்றும் செருப்புகளை யாரும் அலுவலகத்தில் அணியக்கூடாது. இந்த புதிய விதிகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து சிபிஐ அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.