Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சைக்கு மருந்துகள் அனுப்ப…. மா.சுப்பிரமணியன் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயாலும் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய்க்கு இதுவரை 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், வேலூரில் மட்டும் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தமிழ்நாட்டிற்கு முப்பதாயிரம் மருந்து குப்பிகள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதல்வர் மு.க ஸ்டாலின் கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து குப்பிகள் அனுப்பிட மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |