உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வந்ததன் காரணமாக பல்வேறு நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் பொருளாதார இழப்பை சந்தித்து வந்தன. அந்தவகையில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியும் குறைந்து வந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் எலக்ட்ரானிக், மொபைல் வாகனங்கள் ஆகிய துறைகளில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் எல்ஜி, சாம்சங், கோத்ரேஜ், விவோ போன்ற நிறுவனங்கள் உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளன. மே மாதத்தில் உற்பத்தி 30 முதல் 40 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் ஜூலையில் உற்பத்தி நிலைமை சரியாகும் என்று தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.