Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலில் கொள்ளையடிக்க முயற்சி…. இதோட 4- வது முறை நடக்குது…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவிலுக்குள் நுழைந்து சாமி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வைத்தியநாத புரத்தில் முத்தாரம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு காலை மாலை என இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது ஊரடங்கு காலம் என்பதனால் பக்தர்களை கோவிலுக்கு அனுமதிக்காமல் பூசாரி மற்றும் பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூசாரி வழக்கம் போல் பூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு சென்றபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

மேலும் கோவில் கருவறையின் கதவை உடைப்பதற்கு முயற்சி செய்ததையும், சாமிக்கு தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த அறையையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். ஆனால் கோவிலுக்குள் இருந்த நகைகள் எதுவும் திருட்டு போகவில்லை என்று பூசாரி கூறியுள்ளார். இதுகுறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் கோவிலில் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த கோட்டார் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள உள்ள 12 சிசிடிவி கேமரா ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளனர்.

ஆனால் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் மின் இணைப்பை துண்டித்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  இதேபோன்று இந்த கோவிலில் ஏற்கனவே மூன்று முறை திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இது நான்காவது முறையாக நடந்த திருட்டு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில் நகையை கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |