Categories
தேசிய செய்திகள்

100% ஊழியர்களுடன் இயங்க அனுமதி…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை பொருத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மே மாதம் முதல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50% ஊழியர்களுடன் இயங்கி வந்தது. ஆனால் தற்போது அங்கு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததால்,குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் ஜூன் 7ஆம் தேதி முதல் 100% ஊழியர்களுடன் இயங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |