தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் பயணி ஒருவர் பணிப்பெண்ணை தாக்கிய பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது .
சான் டியாகோ சர்வதேச விமான நிலையத்திற்கு சாக்ரமென்டோவிலிருந்து சென்ற தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்க தயாரானபோது பயணிகளிடம் விமான பெண் உதவியாளர் தங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்போது விமான பணிப்பெண்ணின் முகத்தில் விவியன்னா குயினோனெஸ் ( 28 ) என்ற பெண் சரமாரியாக குத்தியுள்ளார். அதனை தடுக்க முயன்ற மற்றொரு பயணியை அந்தப் பெண் மிரட்டியதோடு, விமானப் பணிப்பெண்ணை மிக மோசமாக தாக்கியதில் அவர் தன்னுடைய இரண்டு பற்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
https://twitter.com/i/status/1398006148951838722
அதோடு மட்டுமல்லாமல் அந்த விமான பணிப்பெண்ணின் முகத்தில் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட்டின் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் விமானத்தில் நடந்த இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு பயணி ஒருவர் அருகில் இருந்து வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து சான் டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்கியவுடன் விமானத்திலிருந்து குயினோனெஸை காவல்துறையினர் வெளியேற்றியதுடன் அவரை கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.