Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ரியல் எஸ்டேட் அதிபதி வழக்கு” தப்பிக்கவே முடியாது…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

ஏலகிரி மலையில் பணத்திற்காக ரியல் எஸ்டேட் அதிபதியை கடத்திய வழக்கு தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தனாவூர் பகுதியில் அருள் என்ற அருள்முருகன் வசித்து வருகின்றார். இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கின்றார். இந்நிலையில் அருள் நடை பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கும்போது கடந்த 2019ஆம் ஆண்டு காரில் வந்த மர்ம கும்பல்கள் அவரை கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து அருள் குடும்பத்தினர் ஏலகிரிமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள கண்காணிப்பு காட்சிகள் மூலம் மற்றும் அருளின் செல்போன் மூலமாக விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஒரு பகுதியில் அருளை கடத்தி வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின்  காவல்துறையினர் அருளின் செல்போன் டவர் மூலம் கண்காணித்து அவரை மீட்டுள்ளனர். இதனைதொடர்ந்து அருளை பணத்திற்காக கடத்தி சென்ற சம்பத் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்  தலைமறைவாக இருக்கின்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் முத்தனூர் பகுதியில் சந்தேகத்தின்படி  நின்ற மூன்று பேரை ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜன் மற்றும் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி,  கரியசந்திரம் பகுதியைச் சேர்ந்த சின்ன நாயுடு மற்றும் ரூபே இவர்கள் பணத்திற்காக ரியல் எஸ்டேட் அதிபதியை கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |