நவீன வசதிகளுடன் சமையல் கூடத்தை போலீஸ் சூப்பிரண்ட் திறந்து வைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் உணவு கூடம் ஒன்று அமைந்துள்ளது. தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் பார்சல்கள் மூலம் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த உணவுக் கூடத்தை புதுப்பித்து உள்ளனர்.
இதனை அடுத்து நீராவி மூலம் நவீன முறையில் சமையல் தயாரிக்கும் புதிய சமையல் கூடம் அங்கு அமைந்துள்ளது. இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட சமையல் கூடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பாலாஜி சரவணன் திறந்து வைத்துள்ளார். மேலும் இதன் மூலம் ஒரே நேரத்தில் 300 நபர்களுக்கு சமையல் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.