ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயை இழந்த சோகத்தில் மகனும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டணத்தை அடுத்துள்ள காந்தி நகரில் காளிமுத்து(65) என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டர் ஆக வேலை பார்த்து கொண்டிருந்த இவருக்கு திருமணம் ஆகாததால், இவரது தாய் வள்ளியை(90) பார்த்துக்கொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு காளிமுத்து தாயார் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தாயை இழந்த சோகத்தில் மிகவும் மனமுடைந்த காளிமுத்து மரைக்காயர் ஊருணி அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.