மின்சார சுவிட்சை ஈரகைகளுடன் போட்டதால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் கணபதி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணபதி தனது வீட்டில் இருக்கும் மின்சார சுவிட்சை ஈரகைகளுடன் போட்டுள்ளார். அப்போது அதில் இருந்து பாய்ந்த மின்சாரத்தால் கணபதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கணபதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல்துறையினர் கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.