Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபர் ட்ரம்பின் முகநூல் பக்கம் முடக்கம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முகநூல் கணக்கு 2 வருடங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து, ஜோ பைடன் வெற்றியடைந்தார். எனவே அவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் செயல்பாடுகள் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அன்று அமெரிக்காவின் பாராளுமன்ற கேப்பிடல் கட்டிட வளாகத்தில் நடந்துள்ளது.

அப்போது முன்னாள் அதிபர் டிரம்ப், தோல்வியடைந்த கோபத்தில், தன் ஆதரவாளர்களை கலவரத்தில் ஈடுபடும் விதமாக பேசி, அதனை  இணையதளங்களிலும் வெளியிட்டிருந்தார். எனவே ட்ரம்பின் ஆதரவாளர்கள், கேப்பிடல் கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றி வந்த ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தை அந்நிர்வாகம் நிரந்தரமாக முடக்கியது. ஆனால் முகநூல் நிர்வாகம், தற்காலிகமாக முடக்கியிருந்தது. இந்நிலையில் தற்போது, முகநூல் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ட்ரம்பின் முகநூல் பக்கத்திற்கு 2 வருடங்களுக்கு தடை விதிக்கப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவரது முகநூல் பக்கம் 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்பு மக்களின் பாதுகாப்பிற்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று உறுதி செய்த பின்புதான் மீண்டும் அவரின் முகநூல் பக்கம் அனுமதிப்படுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிரம்ப் இந்த செயல்பாடு, எனக்கு வாக்களித்த மக்களை அவமதிப்பதாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |