தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.