மகாராஷ்டிர மாநிலத்தில் மனைவி ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தினால் அவரை வீட்டில் வைத்து அடைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களையும் ஒரு அறையில் வைத்து அடைத்து ஒன்றரை வருடமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட துண்டு காகிதத்தில் எழுதி அதை ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்து மனைவி மற்றும் மூன்று மகள்களையும் மீட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் விசாரணையில் கூறியதாவது: “தான் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்க முடியாததால் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக என் கணவர் என்னை அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்” என அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.