உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே உலக நாடுகள் வேகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். பல நாடுகளிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாகவும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இங்கிலாந்தில் 75 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் எப்போது தொடங்கும் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.