Categories
உலக செய்திகள்

டுவிட்டருக்கு தடையா…? வெளியான பரபரப்பு தகவல்… பிரபல நாட்டின் அதிரடி அறிவிப்பு..!!

நைஜீரியாவில் அதிபரின் பதிவை நீக்கிய ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்திற்கே நைஜீரிய அரசு தடை விதித்திருப்பது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் முகம்மது புஹாரி என்பவர் அதிபராக பணியாற்றி வரும் நிலையில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நைஜீரியாவில் அதிபர் முகமது வன்முறையை தூண்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் 1967-70 வரை நடைபெற்ற உள்நாட்டுச் சண்டையை மேற்கோள்காட்டி கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் நைஜீரிய உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட பேரிழப்புகள் குறித்து இன்று தவறான வழியில் செல்லும் இளைஞர்கள் தெரிந்திருக்க இயலாது என்றும், தங்களுடன் முப்பது மாதங்களாக போரை சந்தித்தவர்கள், களத்தில் இருந்தவர்கள், போரில் ஈடுபட்டுவர்கள் புரிந்து கொள்ளும் மொழியிலேயே நடத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்த பதிவானது கருத்து மோதலை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் டுவிட்டர் நிறுவனமானது அந்த பதிவை தங்களது வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இந்நிலையில் நைஜீரியாவில் அதிபருடைய பதிவு நீக்கப்பட்டதால் ட்விட்டருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நைஜீரிய அரசானது டுவிட்டர் தங்கள் நாட்டில் செயல்பட காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. அதிபரின் டுவிட்டர் பதிவை நீக்கிய ஒரே காரணத்திற்காக நைஜீரிய அரசு கோபத்தில் ஒட்டுமொத்தமாக டுவிட்டர் நிறுவனத்திற்கே தடை விதித்திருப்பது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |