தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை வகுக்க கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனிக்குழு, வகுப்புகளை வீடியோ பதிவு நடவடிக்கை உள்ளிட்ட பரிந்துரைகளுக்கு வாய்ப்புள்ளது.