Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. சமூக இடைவெளி இல்லை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மாமல்லபுரத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி இன்றி நடத்திவந்த டீக்கடையை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் பகுதியில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி டீ கடையை நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அங்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி இல்லாமல் டீ விற்பனை நடைபெற்று வந்ததால் அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்துள்ளனர். இதுபோன்று மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தேவனேரி கொக்கிலமேடு, பட்டிபுலம், புதுகல்பாக்கம், கிருஷ்ணன் காரணை போன்ற பல்வேறு இடங்களுக்கு காவல்துறையினர் சென்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி யாரேனும் கடையை திறந்து இருக்கிறார்களா என சோதனை நடத்தினர்.

Categories

Tech |