Categories
தேசிய செய்திகள்

டெல்லி உள்பட 3 மாநிலங்களில் கனமழை… மரங்கள் வேருடன் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு…!!!

டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தியாவில் டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மூன்று நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. டெல்லியில் வின்சர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையோரம் இருந்த பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

டெல்லி முழுவதும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், சப்தர்ஜங் பகுதி உள்ளிட்ட இடங்களில் 30 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதேபோன்று கேரளாவில் கோழிக்கோடு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை காரணமாக சாலை எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கர்நாடகாவில் பெங்களூருவில் நல்ல மழை பெய்தது. இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |