Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் + 2 பொதுத்தேர்வு – கட்சிகளின் ஆதரவும், எதிர்ப்பும்…!!!

தமிழகத்தில் +2 பொது தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இடையே கருத்து கேட்பு நடத்தியதில் 60 சதவீதம் பேர் கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக இறுதி முடிவெடுக்க நேற்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று பிளஸ் டூ தேர்வு நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்த பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் காங்கிரஸ், விசிக, மமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே தமிழக அரசு பொதுத் தேர்வை நடத்துமா? ரத்து செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |