Categories
மாநில செய்திகள்

BREAKING: நீட் தேர்வு… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய நீதியரசர் ராஜன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர்  மு க ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் உயர் குழு ஒன்றை அமைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராம மற்றும் நகர்ப்புற மாணவர்கள், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தமிழ் வழியில் பயின்ற மாணவர் , பின்தங்கிய  நிலையில் உள்ள மாணவர்கள் போன்றவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகின்றது.

இதனை கருத்தில் கொண்டு  நீட் தேர்வு முறையை கைவிட வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ கல்லூரி இடங்கள் நிரப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மீண்டும் நீட் தேர்வு முறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளார்.  சமூக நீதியை நிலைநாட்டும் கடமை தமிழக அரசுக்கு எப்போதும் உண்டு. நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை அகற்ற தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட என குழு ஆராயும் என்று அவர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |