பிளஸ் 2 பொது தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது.
தற்போது பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் +2 பொதுத்தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து பிளஸ் 2 மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் தேர்வை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.