தடுப்பூசி வீணாவது அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும், இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது .சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. அதே வேளையில் பல மாநிலங்களில் தடுப்பூசி வீணாகும் நிகழ்வும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக நேற்று ஆய்வு கூட்டம் ஒன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்தல், தடுப்பூசிகளை விரைவாக மக்களுக்கு கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் நாட்டில் கொரோனா தடுப்பூசி வீணடிப்பது அதிக அளவில் உள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.