Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான பாதுகாப்பு குறைப்பு…. மத்திய அரசு அதிரடி…!!

மன்மோகன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்ப பெற்றது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் இருக்கும் மிக முக்கிய அரசியல் பிரபலங்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசால் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கபப்டடு வருகின்றது. அந்த வகையில் தற்போது பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு இந்த பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.

Image result for manmohan singh

அதே போல் பிரதமராக செயல்பட்டவருக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை பொறுத்து இந்த பாதுகாப்பானது நீடிக்கப்படும். பாதுகாப்பு குறித்து உளவுத்துறை கொடுக்கும் அறிக்கையில் அடிப்படையில் மத்திய அரசு இதை தீர்மானிக்கின்றது.இதன் படி தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப மத்திய அரசால் திரும்ப பெறப்பட்டுள்ளது.  இதனால் மன்மோகன் சிங்கிற்கு இனிமேல், சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

Categories

Tech |