தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பேசும் பொருளாக மாறியவர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு சசிகலா, அரசியலில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்கள் சிலருடன் சசிகலா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதற்கு அதிமுகவை சேர்ந்த அனைவரும் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக கட்சி முழுவதுமாக சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார். இது எனது அரசியல் ஆருடம். எடப்பாடி பழனிசாமி முதல்வரானது ஒரு சரித்திர விபத்து. அந்தக் கதை முடிந்து விட்டது. இனி சசிகலாதான் அதிமுகவிற்கு தலைமை தாங்குவார் என அவர் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.