தன்னை வளர்த்த பாகன் உயிரிழந்த நிலையில் அவரின் உடலுக்கு யானை ஒன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோட்டையை சேர்ந்த தாமோதரன் நாயர் என்பவர் பிரம்மதத்வன் என்ற யானையை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவை அறிந்த யானை உணவு எதுவும் உண்ணாமல் சோகத்தில் மூழ்கியிருந்தது. இதையடுத்து மற்றொரு பாகன் அந்த யானையை அவரது உடலைப் பார்ப்பதற்கு அழைத்து வந்தார்.
https://twitter.com/ashokepandit/status/1400879687161696257
அங்கு வந்ததும் தனது தும்பிக்கையை மூன்று முறை சுழற்றி, கண்ணீர்விட்டு அழுதது. இது காண்போரின் கண்களில் கண்ணீரை வர வைக்கும் காட்சியாக உள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த யானையை 24 வருடமாக தாமோதரன் வளர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.