Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

யாரும் அந்த பகுதிக்கு போக கூடாது…. வெள்ளம் வர வாய்ப்பிருக்கு…. மாவட்ட கலெக்டரின் தகவல்….!!

கவுண்டன்ய ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தாலுகா மோர்தானா கிராமத்தில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு 261.36 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து 5 நாட்களுக்கு வேலூர் மாவட்டத்தில் கமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே கனமழை பெய்து மோர்தானா அணையில் இருந்து உபரி நீர் வெளியேறினால் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

இதனால் பொதுப்பணித் துறையினரும், வருவாய் துறையினரும் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால் கவுண்டன்ய ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மோர்தானா, கொட்டார மடுவு, சேம்பள்ளி, மீனூர், இந்திரா நகர், சித்தாத்தூர் போன்ற பல்வேறு கிராமங்கள் ஆற்றின் கரையோரம் பள்ளமான பகுதியில் வசித்து வருவதனால் அவர்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு கலெக்டர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். எனவே கன மழை நேரத்தில் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் யாரும் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |