Categories
மாநில செய்திகள்

EMI கடன் தவணை செலுத்த 3 மாதம் விலக்கு தேவை…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கி உள்ளதால் பொதுமக்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வங்கி EMIதவணையை வட்டி இல்லாமல் ஒத்திவைக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் சில நிதி நிறுவனங்கள் தவணை தொகையை செலுத்த வற்புறுத்தி வருகின்றன.

இந்நிலையில் திண்டுக்கல்லில் கடன் தவணையை கட்டுமாறு தனியார் வங்கிகள் பொதுமக்களுக்கு நெருக்கடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குப் போகாமல் வீட்டில் முடங்கியுள்ள தங்களால் எப்படி மாத கடன் தவணை செலுத்த முடியும். எனவே கடன் தவணை செலுத்துவதில் இருந்து குறைந்தது 3 மாத விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |