Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்டென விழுந்த சுவர்… சேதமடைந்த மின் கம்பம்… தீவிரமாக நடைபெறும் பணி…!!

பள்ளியின் சுற்றுசுவர் கட்டிடம் இடிந்து மின்கம்பம் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மாலை நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டிடம் அங்கு பெய்த கனமழை காரணமாக இடிந்து மின் கம்பம் மீது விழுந்து விட்டது.

இதனையடுத்து அந்த மின்கம்பம் சேதம் அடைந்ததால் அப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த உடன் சேதமடைந்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் மின்சார ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |