Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது… வசமாக சிக்கியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அதிகாரியான அசோக்குமாருக்கு அப்பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பிற அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வரதராஜன் என்பவர் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தியதை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் வரதராஜனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |