Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நம்பி வாங்கினோம்…. எங்களை மோசம் பண்ணிட்டாங்க…. காவல்துறையினரின் விசாரணை….!!

பெட்ரோல் பங்கை விற்பனை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நெடும்பலம் கிராமத்தில் கலைமகள் சேகர் மற்றும் அவரது சகோதரர் முருகானந்தம் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு கூத்தாநல்லூர் அனங்குடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வைகுண்டம் என்பவரின் பெட்ரோல் பங்க் விற்பனைக்கு இருப்பதாக அவரிடம் விலைபேசி இருக்கின்றனர். அதற்கு வைகுண்டம் பெட்ரோல் பங்க் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் திருத்துறை பூண்டியில் உள்ள தனியார் நிதிநிறுவன அதிபர் நடராஜனிடம் அடகு வைத்துள்ளதாகவும், அவரிடம் உள்ள கடனை அடைக்கவும், மேலும் ஸ்டேட் வங்கியில் உள்ள கடனை அடைத்தால் தான் பெட்ரோல் பங்க் விற்பனை செய்வதாக அவர்களிடம் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவன அதிபர் நடராஜனிடம் ரூபாய் 85 லட்சத்தை கலைமகள் சேகர் மற்றும் அவரது சகோதரர் முருகானந்தம் வழங்கியுள்ளனர். இதனையடுத்து ஸ்டேட் வங்கியில் உள்ள கடன்  20 லட்சத்தையும் வைகுண்டத்தில் ஒப்படைத்தனர். மேலும் நடைமுறை மூலதனமாக ரூபாய் 55 லட்சத்தை முதலீடு செய்துள்ளனர். இவ்வாறு கலைமகள் சேகர் மற்றும் முருகானந்திடம் பெட்ரோல் பங்க் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் வைகுண்டம் தனது கடனை முழுவதுமாக அடைத்த உடன் தனது மகன் பரணிதரன் அவரது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு சென்று நடராஜனிடம் வாங்கிய கடனுக்கு அவரது மகன்களின் பெயரில் நிலத்தை அவருக்கு எழுதி கொடுத்து விட்டோம்.

ஆகையால் நீங்கள் பெட்ரோல் பங்கை விட்டு வெளியேற வேண்டும் என்று கலைமகள் சேகர் மற்றும் முருகானந்தத்தை மிரட்டியுள்ளனர். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் வைகுண்டம், அவரது மகன் பரணிதரன், நிதி நிறுவன அதிபர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வைகுண்டம்,நடராஜன் உள்ளிட்ட இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |