நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நடிகை சஞ்சனா கல்ராணி, இன்று தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டார். மேலும் மக்கள் எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இது மிக நெருக்கடியான காலம் என்பதால் தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.