அல்லு அர்ஜுனின் புஷ்பா பட டீஸர் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா . இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி புஷ்பா திரைப்படம் வெளியாக உள்ளது.
First & Fastest 70M+ views with 1.6M+ Likes 🔥#PushpaRaj 🔥#ThaggedheLe 🤙
– https://t.co/1LIA6cH98I#IntroducingPushpaRaj#Pushpa@alluarjun @iamRashmika #FahadhFaasil @aryasukku @ThisIsDSP @resulp @adityamusic @MythriOfficial
పుష్ప പുഷ്പ புஷ்பா ಪುಷ್ಪ पुष्पा pic.twitter.com/gq007FqyYg
— Pushpa (@PushpaMovie) June 4, 2021
நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் புஷ்பா பட டீஸர் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.