Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சட்ட விரோதமான செயல்” சாராயம் காய்ச்சு விற்பனை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த சாராய பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழநம்மங்குறிச்சி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாக திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஞானசுமதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த சில பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கீழநம்மங்குறிச்சியை சேர்ந்த அந்தோணிசாமி, சித்திக், ராஜவீரன், சித்திரவேலு ஆகியோர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த சாராய பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |