Categories
உலக செய்திகள்

நடுவானத்தில் விமானத்தை கடத்த முயற்சி.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவில் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பயணி விமானியின் அறைக்குள் அதிரடியாக புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குரிய 386 என்ற விமானம் நாஷ்வில் புறப்பட்டு சென்றது. அப்போது விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பயணி, திடீரென்று விமானியின் அறைக்குள் அதிரடியாக புகுந்துள்ளார்.

உடனடியாக விமான பணியாளர் அவரை தடுத்து நிறுத்தி, கயிற்றால் கைகால்களை கட்டி வைத்தார். அந்த பயணி விமானியின் அறைக்குள் புகுந்து அந்த விமானத்தை கடத்த திட்டமிட்டு இருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து விமானம் Albuquerque விமான நிலையத்திற்கு திருப்பி, பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

https://twitter.com/1WaySuggs/status/1400930876737921025

அதன் பின்பு, அந்த பயணியை காவல்துறையினர் மற்றும் எஃப்பிஐ அதிகாரிகள் உடனடியாக கைது செய்திருக்கிறார்கள். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டெல்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |