கொண்டக்கடலை குருமா
தேவையான பொருட்கள்:
கொண்டக்கடலை – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பட்டை , கிராம்பு , சோம்பு – சிறிதளவு
தேங்காய் , சோம்பு விழுது – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – தேவையான அளவு
மிளகாய் தூள் -தேவையான அளவு
மல்லி பொடி – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , சோம்பு, வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும் .பின் தக்காளி சேர்த்து உப்பு , மஞ்சள் , மிளகாய் தூள் , மல்லி பொடி , வேகவைத்த கடலை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .பின்னர் அரைத்த தேங்காய் சோம்பு விழுது போட்டு மல்லி இலை தூவி எண்ணெய் தெளிய இறக்கினால் சூப்பரான கொண்டைக்கடலை குருமா தயார் !!!