தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1 முத1ல் 1 ஆம் வகுப்புகள் தேர்வு எழுதாமலேயே ஆல் பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மட்டும் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கு மத்தியில் ஜூன் 1 முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? இல்லையா? என்ற குழப்பம் நிலவி வந்த சூழலில் கொரோனா பரவல் நன்றாக குறைந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதவாறு கடந்த ஆண்டை போலவே வீட்டு பள்ளி திட்டத்தை புதிய கல்வி ஆண்டிலும் தொடர முடிவாகியுள்ளது. கல்வி தொலைக்காட்சி மற்றும் மாணவர்களுக்கு புதிய வகுப்புகள் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது.