Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 4 வது சுற்றில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி …! செரீனா அசத்தல் வெற்றி…!!!

‘கிராண்ட்ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 4 ம் நிலை  நட்சத்திர வீராங்கனையான அரினா சபலென்கா , ரஷ்ய வீராங்கனையான  அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவுடன் மோதினர் .இதில்   6-4, 2-6, 6-0  என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி , அனஸ்டசியா  4 வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீசை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து , 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கடந்த 2013 ம் ஆண்டிற்கு  பிறகு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் அஸரென்கா 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .முன்னாள் சாம்பியனான அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், டேனியலி காலின்சை    6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து  4வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத்தொடர்ந்து ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 3 வது சுற்று போட்டியில் 6 ம் நிலை  வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் , செர்பியாவை சேர்ந்த லாஸ்லோ டெரேயுடன் மோதி , 6-2, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து  4 வது சுற்றுக்கு  முன்னேறியுள்ளார்.  ஸ்பெயின் வீரரான  டேவிடோவிச் போகினா , நார்வே வீரரான கேஸ்பர் ரூட்டுடன் மோதி , 7-6 (7-3), 2-6, 7-6 (8-6), 0-6, 7-5  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முதல் முறையாக கால் பதித்தார்.இந்த போட்டி 4  மணிநேரம் 35 நிமிடங்கள் வரை நடந்தது .இவர்களை தொடர்ந்து  மெட்விடேவ் (ரஷியா), நிஷிகோரி (ஜப்பான்), பெடெரிகோ டெல்போனிஸ் (அர்ஜென்டினா) மற்றும் காரெனா பஸ்தா (ஸ்பெயின்) ஆகியோர்  தங்களது ஆட்டத்தில் வெற்றி பெற்றனர் .

Categories

Tech |