Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காய்கறிக்குள் இதுதான் இருந்துச்சா…. தப்பி ஓடிய வேன் டிரைவர்…. திருப்பத்தூரில் நடந்த சம்பவம்….!!

திருப்பத்தூரில் காய்கறிக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பனூர் சோதனைச் சாவடியில் வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் நோக்கி சென்ற மினி வேன் ஒன்றை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். அதன்பின் மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த வேனை சோதனையிட்டதில் அதில்  காய்கறிக்குள் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை கண்டுபிடித்துள்ளனர். . இதனைதொடர்ந்து காவல்துறையினர் ரேஷன் அரிசி மற்றும் அந்த வேனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய சி.சி.டிவி ஆதாரங்கள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |