Categories
மாநில செய்திகள்

இந்திய அரசின் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் – திருமாவளவன் கோரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது.

கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பொதுத்தேர்வை ரத்து செய்து வருகின்றன.

இந்நிலையில் திருமாவளன் எம்பி, இந்தியாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி வருகின்றன. அதை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டாம் அனைத்து பட்ட வகுப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு முறையை திணிப்பதற்காகவே இந்த நாடகம். எனவே இந்திய அரசின் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |