கனடாவில் பூர்வகுடியின குழந்தைகளுக்கு நடந்த கொடூரங்களை தொடந்து, பெண்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் சமீபத்தில் பூர்வகுடியின குழந்தைகளுக்கு நடந்த கொடுமை வெளிவந்தது. பூர்வகுடியின பள்ளிகள் இருக்கும் இடங்களில் நூற்றுக்கணக்கில் குழந்தைகளின் உடல் புதைக்கப்பட்டிருந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் பூர்வகுடியின பெண்களுக்கு நடக்கும் அநியாயம் வெளிவந்துள்ளது.
கடந்த 2001 ஆம் வருடத்தில், பூர்வகுடியின பெண் ஒருவர், Saskatoon-ல் பிரசவத்திற்காக வந்திருக்கிறார். குழந்தை பிறந்த பின்பும், அறுவைசிகிச்சை அறையிலிருந்து மருத்துவர்கள் அவரை வெளியேவிடவில்லை. எனவே அந்த பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்து தானாகவே வெளியே செல்ல முயற்சித்திருக்கிறார்.
எனினும் ஒரு மருத்துவர் அவரை மீண்டும் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச்சென்று அவரின் அனுமதியில்லாமல், வலுகட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். இவர் மட்டுமல்ல, இதேபோன்று 16 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மனித உரிமைகளுக்காக செனேட் கமிட்டி முன்பு, அவர்கள் தங்களுக்கு நடந்த அநியாயங்ககளை தெரிவித்துள்ளார்கள்.
கடந்த 1970 ஆம் வருடம் வரை பூர்வகுடியின பெண்கள், சுமார் 1,150 பேருக்கு இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. அது பழைய கதை என்று விட முடியாது. ஏனெனில் தற்போதும் இந்தக் கொடூரம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று மனித உரிமைகளுக்கான செனேட் கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கமிட்டியின் தலைவர் Salma Ataullahjan, இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை மேற்கொண்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.